இந்தியாவில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற சாதனையை அவதார் 2 திரைப்படம் படைத்துள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் படத்தின் 2ஆம் பாகம், டிசம்பர் 16ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.
இந்தியாவில் மட்டும் இதுவரை 368 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்த திரைப்படம், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்(Avengers End game) திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.