ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் விநாயகரை வணங்குவது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார்.
இந்தியாவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள வார்னர், சமூக வலைதளங்களில் இந்தியப் பாடல்களுக்கு நடனமாடி பதிவிடுவதும், இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதும் வழக்கம்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், விநாயகர் புகைப்படத்தை பகிர்ந்து வார்னர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்