அதிரடியாய் பந்து வீசிய ஆஸி. ....திக்குமுக்காடிய தென் ஆப்பிரிக்கா - "பாக்சிங் டே" டெஸ்டில் அபாரம் ....பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 189 ரன்களுக்கு சுருண்டது.
மெல்போர்னில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள், ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்த வெரைன் மற்றும் ஜேன்சன் அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, முதல் இன்னிங்சில்189 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆனது. ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரான் க்ரீன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 32 ரன்களுடனும், லபுஷேன் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.