இளைஞரை கத்தியால் தாக்கி பணம் பறிப்பு - அதிமுக நிர்வாகி உட்பட இருவர் கைது

Update: 2022-12-12 02:44 GMT

கரூரில் இளைஞரை கத்தியால் தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் அதிமுக நிர்வாகி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் அதே பகுதியில் சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, பசுபதிபாளையத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான, மகேந்திரன், சுரேஷ் ஆகிய இருவரும், சியாம் சுந்தரை கத்தியால் தாக்கியதோடு, 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில், இருவரையும் கைது செய்த தாந்தோணிமலை போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்