நித்யானந்தாவை பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு- நக்கீரன் கோபாலுக்கு பிடிவாரண்ட்
- நித்யானந்தாவை பணம் கேட்டு மிரட்டியதாக வழக்கு- நக்கீரன் கோபாலுக்கு பிடிவாரண்ட்
- நக்கீரன் கோபாலுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு நித்யானந்தா - ரஞ்சிதா ஆபாச வீடியோ வெளியாவதற்கு முன் நக்கீரன் தரப்பும், அந்த வீடியோவை வைத்திருந்த நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலரும், நித்யானந்தாவை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்பட்டது. அவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது, கை கலப்பு ஏற்பட்டு, நித்யானந்தா தரப்பில் பலருக்கு காயம் ஏற்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், கோடிக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதாக நக்கீரன் கோபால் உள்ளிட்ட 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நக்கீரன் கோபாலுக்கு சைதாப்பேட்டை 11-வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுல்தான் அர்பின், பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.