கேரளாவில் பலரையும் கொன்று, 300க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய அரிக்கொம்பன் யானையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது..கேரள மாநிலம் இடுக்கியில், சின்னகானல் மற்றும் சாந்தாம்பாறை பகுதிகளில் புகுந்த அரிக்கொம்பன் யானை, 20 பேரை கொன்று, 300க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரிக்கொம்பன் யானைய பிடிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வனத்துறை தலைமை மருத்துவர் தலைமையிலான 150 பேர் கொண்ட 8 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். இதில், அரிக்கொம்பனை பிடிக்க 4 கும்கி யானைகள் பயன்படுத்தப்பட உள்ள நிலையில், மூணாறு சின்னாக்கானல் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சுற்றுலான பயணிகளும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரிக்கொம்பனை பிடிக்க அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.