"போலீசார் மீது அவதூறு" - மனித உரிமை மீறல் நடைபெற்றதா? 3மணி நேரம் விசாரணை...
- ஆரணியில் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறி, விசிக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்த நிலையில், திடீர் திருப்பமாக, மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர், விசாரணை மேற்கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வழக்கு ஒன்றில் ஜாமீனில் வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் பாஸ்கரனுக்கு ஆரணி எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அப்போது, போலீசாரை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிர்வாகிகள் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
- இந்த நிலையில், திடீர் திருப்பமாக, மதுரையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பினர், வழக்கறிஞர் பாப்பா மோகன் தலைமையில் 11பேர் கொண்ட குழுவினர், விசாரணையில் இறங்கினர்.
- ஆரணி அடுத்த வடுகாசத்து கிராமத்தில் உள்ள விடுதலைசிறுத்தை கட்சி நிர்வாகிகளின் உறவினர்களிடம் தொடர்ந்து 3மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
- இதில் கைது சம்பவத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றதா? காவல்துறையினர் கண்ணியமாக நடந்து கொண்டார்களா? என விசாரணை நடத்தினர்.