காதலர் தினத்தன்று கன்னியாகுமரி கடற்கரையில் அத்துமீறும் காதல் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல, இந்த ஆண்டும் காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில்,கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஜோடிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், காதலர் தினத்தில் கன்னியாகுமரி கடற்கரையில் அத்து மீறும் காதல் ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.