அனுஷா ஷெட்டியை கரம்பிடித்தார் நடிகர் நாகசௌர்யா - 5 ஸ்டார் ஹோட்டலில் கோலாகல திருமணம்

Update: 2022-11-20 16:42 GMT

டோலிவுட் இளம் ஹீரோ நாகசௌர்யாவுக்கும், இளம் தொழிலதிபர் அனுஷா ஷெட்டிக்கும் இன்று விமரிசையாக காதல் திருமணம் நடைபெற்றது. உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் பெங்களூரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் திருமண விழா கோலாகலமாக நடந்தேறியது. டோலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தம்பதியை ஆசீர்வதித்தனர். திருமண புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், புதுமண தம்பதிக்கு பிரபலங்களும், வலைவாசிகளும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்