இயக்குநர் ராஜமௌலிக்கு அண்ணாமலை கோரிக்கை

Update: 2023-07-12 02:11 GMT

தமிழ்நாட்டின் வரலாற்றுக் கதைகள் வரும்காலத்தில் மகத்தான கலை படைப்புகளாக உருவாக வேண்டும் என இயக்குநர் ராஜமௌலியின், தமிழ்நாடு ஆன்மிக சுற்றுலா குறித்த பதிவை பகிர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழ்நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா வந்தது குறித்து இயக்குனர் ராஜமௌலி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவை பகிர்ந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோயில்கள் நிறைந்த பூமியில் தங்கள் ஆன்மீக சுற்றுலா மகிழ்ச்சியளிக்கிறது என்றும், வருங்காலத்தில் தமிழ்நாட்டின் வரலாற்றுக் கதைகள் மகத்தான கலை படைப்புகளாக உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்