ANI செய்தி நிறுவனத்துக்கு வந்த சோதனை - ட்விட்டர் நிறுவனம் அதிர்ச்சி விளக்கம்

Update: 2023-04-30 01:40 GMT

ட்விட்டர் நிறுவனத்தால் முடக்கப்பட்ட ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கைப்பற்றியது முதல், அந்த நிறுவனம் பல்வேறு அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், பல முன்னணி ஊடகங்களுக்கு செய்தி வழங்கி வரும் "ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல்" என்னும் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் திடீரென்று முடக்கியது. இதுதொடர்பாக, ஏ.என்.ஐ. செய்தி ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு ட்விட்டர் நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில், ஒரு ட்விட்டர் கணக்கை தொடங்க வேண்டுமெனில் அதன் உரிமையாளர் 13 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும், அந்த வயதை பூர்த்தி செய்யவில்லை என்பதால், ஏ.என்.ஐ.-யின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சில மணி நேரத்துக்குப் பிறகு ஏஎன்ஐ ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்