ஏலப்பணத்தை உயர்த்தி கேட்டதால் ஆத்திரம்...மாட்டுப்பண்ணை ஓனர் மிளகாய்பொடி வீசி கொலை...

Update: 2023-07-13 00:24 GMT

கிருஷ்ணகிரி - ஜூஜூவாடி

5 வருடங்களாக தொடர்ந்த குத்தகை சண்டை...

மிளகாய்பொடி வீசி விவசாயி வெட்டி கொலை...

ஏலப்பணத்தை உயர்த்தி கேட்டதால் ஆத்திரம்...மாட்டுப்பண்ணை ஓனர் மிளகாய்பொடி வீசி கொலை...

மிளகாய் பொடிய முகத்துல வீசி விவசாயி கொடூரமா வெட்டி கொல்லப்பட்டிருக்காரு... இந்த கொலைக்கு பின்னாடி இருப்பது 5 வருட பகை...

சிவப்பு நிற ஆம்னி வேனை நனைத்திருந்த ரத்தக்கறைகள்.


சாலையில் போர்வை போர்த்தி மூடப்பட்டிருந்த ஆணின் சடலம்.


காருக்குள் கிடந்த மிளகாய்ப்பொடி.... கதறி அழுத உறவினர்கள்...


என ஜூஜூவாடி கிராமமே அன்று கொலை பயத்தில் குலை நடுங்கிபோனது.

கொல்லப்பட்டவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள ஜூஜூவாடி கிராமத்தை சேர்ந்த சிவராமன். 52 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

பிள்ளைகள் இருவரும் பெங்களூரில் வேலை பார்த்துவரும் நிலையில், மனைவி போப்பம்மாளுடன் மாட்டுப்பண்ணை வைத்து வாழ்ந்து வந்திருக்கிறார்.

தினமும் காலையில் மாடுகளுக்கு தேவையான தீவனம் அறுத்து வந்து பண்ணையில் போடுவது தான் சிவராமனின் காலைப்பணி.

சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல வயலில் இருந்து தீவனம் அறுத்துக்கொண்டு ஆம்னி வேனில் வந்திருக்கிறார் சிவராமன்.

அப்போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் வேனை வழிமறித்திருக்கிறார்கள். யார் என்ன என்று சுதாரிப்பதற்குள் அந்த இருவரும் கையில் வைத்திருந்த மிளகாய் பொடியை சிவராமனின் முகத்தில் வீசி இருக்கிறார்கள்.

நிலை தடுமாறி கண்ணை கசக்கிய சிவராமனை மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறது அந்த இருவர் கூட்டம்.

ரத்தம் பீய்ச்சி அடித்து சிவராமன் சம்பவ இடத்திலேயே துடித்து இறந்துவிட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.

நடந்த கொலைக்கான காரணம் முன்விரோதமா..? அல்லது பணப்பிரச்சனையா..? என போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தான், போச்சம்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சீனிவாஸ் என்கிற காந்தி, ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்திருக்கிறார்கள்.

அவர்களிடம் நடந்த விசாரனையில் தான் கொலைக்கான காரணம் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.

கொல்லப்பட்ட சிவராமன் கடந்த 5 ஆண்டுகளாக காந்தி நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

கடந்த 3 மாதத்திற்கு முன் குத்தகை தேதி முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஏலத்தை இந்து அறநிலையத்துறை நடந்தி இருக்கிறது. இம்முறையும் எப்படியாவது ஏலத்தை எடுக்க வேண்டும் என திட்டமிட்ட சிவராமன் 75 ஆயிரம் ரூபாய் அதிகமாக ஏலத்தொகையை உயர்த்தி கேட்டிருக்கிறார்.

இதனால் ஏலம் எடுக்க வந்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த சேகருக்கும் அவரது மகன் சீனிவாஸுக்கும் கடுப்பாகி இருக்கிறது. ஆத்திரத்தில் சிவராமனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த சண்டை இருவருக்கும் இடையே பெரும் குரோதமாக மாற பார்க்கும் இடங்களில் கைகலப்பு நடந்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்படியாக சண்டையிட வந்த சேகரை சிவராமன் கீழே தள்ளி விட்டு தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால் கொதித்தெழுந்த சீனிவாசன், நிலத்தை குத்தகைக்கு எடுத்தது மட்டுமல்லாமல் தந்தையையும் அடித்து தாக்கிய சிவராமனை இதற்கு மேலும் விட்டு வைக்க கூடாதென திட்டமிட்டுருக்கிறார்.

அதன்படி நண்பர்கள் பலருடன் சேர்ந்து ப்ளான் போட்டு ஸ்ரீகாந்த என்பவருடன் களத்தில் இறங்கி மிளாகாய்பொடி வீசி சிவராமனின் கதையை முடித்தது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.

விசாரனையின் முடிவில் சீனிவாஸ், ஸ்ரீகாந்த் மற்றும் கொலை துணையாக இருந்த மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்