- நாகையில் புகழ்பெற்ற நீலாயதாட்சியம்மன் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த மிரட்டலை அடுத்து, போலீசார் கோயிலுக்கு விரைந்து சென்றனர்.
- அர்ச்சனை பொருட்கள் விற்கும் கடை, கோவில் வளாகம், பிரகாரம் உள்ளிட்ட இடங்களில், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
- பக்தர்களை அனுமதிக்காமல் 1 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரிய வந்தது.
- இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.