- திருப்பூர், தாராபுரம் ஈஸ்வரன் கோயில் அமராவதி ஆற்றில் உலா வரும் முதலையை பிடிக்கும் பணியில், வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- திருப்பூர் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கடந்த சில தினங்களாக முதலைகள் நடமாட்டம் இருந்து வந்துள்ளது.
- இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தாராபுரம் ஈஸ்வரன் கோயில் அமராவதி ஆற்றில், 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று தென்பட்டுள்ளது.
- இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், முதலையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.