ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லி வரை உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2ஆக, 220 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் ஏற்பட்ட அதிர்வானது டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் உணரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.