ரசிகர்களுடன் படம் பார்த்த நடிகை சுனைனா

Update: 2023-06-26 02:10 GMT

மதுரையில் ரெஜினா படக்குழுவினர் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்தனர். முன்னதாக ரெஜினா திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை சுனைனா இயக்குனர் டோமின் டி.செல்வா மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் ரெஜினா திரைப்படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தனர். பின்னர் பேசிய நடிகை சுனைனா ரெஜினா திரைப்படத்தில் தாம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்