"ஆண்களைக் கெடுப்பதே பெண்கள் தான்.." மகளிர் தின விழாவில் நடிகை ராதிகா பரபரப்பு பேச்சு
மகளிர் தின விழாவில் பேசிய நடிகை ராதிகா, ஆண்களைக் கெடுப்பதே பெண்கள் தான் குற்றம் சாட்டினார்... திமுக சார்பில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில், நடிகை ராதிகா சரத்குமார் முன்னிலையில் சென்னை எழும்பூரில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அப்போது உரையாற்றிய நடிகை ராதிகா, ஆண்களுக்கு எல்லாவற்றையும் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்று தெரிவித்தார்.