பிரபல நடிகர் சாய் தீனா தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவினார். தமிழ் சினிமாவில் வட சென்னை, தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாய் தீனா. இவர் தனது குடும்பத்தினருடன், புத்த துறவி மௌரியா முன்னிலையில் 22 உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டு புத்த மதத்தை தழுவினார். இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் சாய் தீனா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.