உயிரிழந்த ரசிகர் மன்ற பொருளாளர் வீட்டிற்கு சென்ற நடிகர் கார்த்தி... குடும்பத்தாருக்கு ஆறுதல்
தன்னுடைய ரசிகர் மன்ற பொருளாளர் மறைவிற்கு நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார். சென்னை திருவான்மியூரை சேர்ந்த இளைஞர் வினோத். ஓட்டுனரான இவர், தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக உள்ளார். இந்நிலையில் வினோத் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன், குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.