நடிகர் அஜித்தின் பல்வேறு படங்களை தயாரித்த சக்கரவர்த்தி காலமானார் - திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கல்

Update: 2023-04-29 11:05 GMT

தமிழ்த்திரையுலகில் நடிகர் அஜித்குமாரின் நெருங்கிய நண்பராகவும், தயாரிப்பாளராகவும் வலம்வந்தவர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி. இவரது 'நிக் ஆர்ட்ஸ்' தயாரிப்பு நிறுவனம் அஜித் நடித்த வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன், ஆஞ்சநேயா, வரலாறு உள்ளிட்ட ஒன்பது படங்களை தயாரித்துள்ளது. விக்ரம் நடிப்பில் வெளியான 'காதல் சடுகுடு', சிம்பு நடித்த 'காளை', 'வாலு' ஆகிய படங்களையும் தயாரித்த இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவு காரணமாக சினிமா தயாரிப்பில் இருந்து விலகி இருந்தார். இதனிடையே கடந்த எட்டு மாதங்களாக கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், நள்ளிரவில் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் இடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் இறுதியாக விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப் தொடரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்