நாமக்கல் டாஸ்மாக் மேனேஜர் மீது பாய்ந்த நடவடிக்கை

Update: 2023-06-23 03:11 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், மதுவை மொத்த விற்பனை செய்ததாக, மதுபான கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வளையகாரனூர் பகுதியை சேர்ந்த சுந்தராஜ் என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமாரபாளையத்தில் உள்ள மதுபான கடையில் இருந்து மொத்தமாக மது வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்ய வழிவகை செய்ததாக, மதுபான கடையின் மேற்பார்வையாளர் சுப்புராஜா, விற்பனையாளர் செல்வராஜ் மீது குமாரபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, சுப்புராஜா, செல்வராஜ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்