உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் கோயிலில் வைத்து இளம்பெண் ஒருவர் தனது காதலனிடம் புரபோஸ் செய்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் இளம்ஜோடி ஒன்று, மஞ்சள் நிற ஆடை அணிந்து கோயில் முன்பு சாமி தரிசனம் செய்வது போன்றும், பின்னர் அந்த இளம்பெண், தனது காதலன் முன்பு முழங்கால் இட்டு அவரிடம் தனது காதலை முன்மொழிவது போன்றும் காட்சிகள் உள்ளது. இந்த காட்சி வைரலாகி வரும் நிலையில், ட்விட்டர் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.