காதலிக்க மறுத்த பெண்ணை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளைஞர். சென்னையில் பரபரப்பு
சென்னை குமரன் நகர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த இளம் பெண், தனியார் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அந்த பெண்ணை இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்குவதாக அலைபேசி மூலம் போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது, அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். தப்பியோடிய இளைஞர், தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட அந்த இளம்பெண்ணின் உறவுக்காரர் என்பதும், காதலிக்குமாறு வற்புறுத்தி மதுபோதையில் தாக்க முயன்றதும் தெரியவந்தது. இளம்பெண்ணின் உறவினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போலீசார், தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனர்.