அமெரிக்கா, நியூயார்க் நகரில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 180 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். யோகா நிகழ்ச்சியில் அதிக நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதால் கின்னஸ் நிறுவனம் சார்பில், உலக சாதனை படைத்ததாக பிரதமர் நரேந்திர மோடியிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது.