ரத்தமும் சதையுமாக உயிரோடு இருக்கும் கணவனுக்கு இறப்பு சான்றிதழ் வாங்கிய மனைவி.. ரத்து செய்ய முடியாமல் தவிக்கும் சோகம்

Update: 2023-05-13 02:57 GMT

திருப்பத்தூர் மாவட்டம் சின்னமலையாம்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசலு உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

1997 ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய சீனிவாசலு 25 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு 2022 வீடு திரும்பியுள்ளார். இடைப்பட்ட காலத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறி சீனிவாசலு குடும்பத்தினர் இறப்பு சான்றிதழ் வாங்கியுள்ளனர். தற்போது இறப்பு சான்றிதழை ரத்து செய்ய கோரி மனுகொடுத்துள்ள நிலையில் அதனை ரத்து செய்யாமல் அதிகாரிகள் 6 மாதமாக அலைக்கழிப்பதாக சீனவாசலு குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்