வேலைக்கு சென்று வீடு திரும்பிய வடமாநில தொழிலாளிக்கு காரில் காத்திருந்த அதிர்ச்சி.. பல்லடத்தில் நடந்த பகீர் சம்பவம்

Update: 2023-05-17 05:04 GMT

பல்லடத்தில் வடமாநில தொழிலாளியை கடத்தி 56 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலாம் என்பவர், பல்லடம் அருகே அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில் தங்கி, பனியன் நிறுவனம் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 12ஆம் தேதி பணி முடித்து திரும்பிய போது 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று, கோவை அருகே அடைத்து வைத்து சித்ரவதை செய்த‌தாக கூறப்படுகிறது. முகமது சலாமிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை எடுத்து பறித்துக்கொண்டு, ஈரோடு ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து முகமது சலாம் புகார் அளித்த‌தை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கர்நாடகாவை சேர்ந்த ரிப்புன் கான், மேற்கு வங்கத்தை சேர்ந்த சலாம் காடி, அசாமை சேர்ந்த சாயின் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்