உகாண்டா நாட்டில் இது வரை எபோலா தொற்றால் 30 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கூடுதல் சிகிச்சை மையங்களை உகாண்டா அரசு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 15 பேர் சுகாதார ஊழியர்கள் ஆவர்... அவர்களில் 6 பேர் எபோலாவால் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.