மட்டன் சூப்புக்காக பறிபோன உயிர் - திருவள்ளூரில் அதிர்ச்சி சப்பவம்

Update: 2022-11-08 14:17 GMT

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியாக இருந்து வந்தார். இவர் தன் நண்பரான தேவா என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின்தொடர்ந்து வந்த 3 பேர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் முருகேசனை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொலையில் தொடர்புடைய சரவணன், பார்த்திபன், வினோத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டன் சூப் வாங்குவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலையை திட்டமிட்டு அரங்கேற்றியது தெரியவந்தது. இதன்பேரில் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்