ரயில் நிலையத்தில் நடைபெற்ற "பேஷன் ஷோ "-ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

Update: 2023-06-06 07:32 GMT

பிரேசில் நாட்டில், பழைய துணிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ஆடை அணிகலன்களுக்கான அணிவகுப்பு உற்சாகத்துடன் நடைபெற்றது. ரியோடி ஜெனிரோவில் உள்ள மத்திய ரயில் நிலையத்தில் இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. ரயில்வே ஊழியர்கள் பயன்படுத்தும் பழைய சீருடைகளைக் கொண்டு, இந்த நவநாகரீக ஆடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வித்தியாசமான பழைய துணிகளால் உருவாக்கப்பட்ட ஆடை அணிகலன்களை அணிந்து, இளம்பெண்கள் அணிவகுத்தனர். இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்