கோவில் கொடை விழாவில் வெடி வெடித்த தகராறு..! பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நெல்லை மாவட்டம் இடையன்குடியில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலம் அப்குதியில் இருந்து கிறிஸ்தவ தேவாலயம் அருகே சென்றபோது, ஒருதரப்பினர் பட்டாசு வெடித்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மோதல் ஏற்பட்டது.
இதனால், கோயில் திருவிழா ஊர்வலம் தடைப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிலையில், ஊர்வலத்தின் போது பட்டாசை ஒருவர் தூக்கி வீசும் காட்சியும், அதை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் தொடர்பான காட்சியும் வெளியாகி, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.