வடமாநில தொழிலாளர்களுக்கிடையே தகராறு... 6 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக் கொலை - நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்
திருச்சூர் பகுதியில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் குடியிருப்பில் தொழிலாளர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில், அசாமை சேர்ந்த 6 வயது சிறுவன் நஜூர் இஸ்லாம் மற்றும் அவரது தாயார் நஜிலாவும் அரிவாளால் தாக்கப்பட்டனர். இதையடுத்து, இருவரையும் மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், 6 வயது சிறுவன் நஜூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், சிறுவனின் தாயார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய ஜமாலுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.