"97% மரணம் உறுதி" திகில் கிளப்பும் மூளையை உண்ணும் அமீபா.. புதிய தலைவலி ஆரம்பம்..

Update: 2022-12-27 17:25 GMT

தென் கொரியாவில் மூளை உண்ணும் அமீபா பாதிப்பால் முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தென் கொரியாவில் நக்லேரியா ஃபவ்லரி என்ற நோய் தொற்றால் 50 வயது முதியவர் உயிரிழந்து உள்ளதாக, அந்நாட்டு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் 4 மாதங்கள் தங்கிவிட்டு தென் கொரியா திரும்பியவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நக்லேரியா ஃபவ்லரி ஒருவகை அமீபாவால் ஏற்படுகிறது. மூக்கு வழியாக உடலுக்குள் செல்லும் அமீபா, மூளை திசுக்களை தின்று உயிரிழப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவிக்கிறது. இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டால் 97 % இறப்பு உறுதியாகி என்பது வரலாற்று பதிவாக உள்ளது. உலகம் முழுவதும் 400-க்கும் அதிகமானோர் இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 98.5 % பேர் உயிரிழந்துவிட்டனர். காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, மயக்கம் ஆகியவையே அமீபா பாதிப்பின் அறிகுறியாகும். இந்த அறிகுறி காணப்பட்ட 5 ஆவது நாளே உயிரிழப்பு நேரிடுகிறது. அசுத்த நீரை குடித்தாலும் இந்த அமீபா பரவாது எனக் கூறும் ஆய்வாளர்கள், அமீபா மூக்கு வழியாக நுழையும் போதே ஆபத்தாகிறது என்கிறார்கள். இதில் ஆறுதல் செய்தியாக அமீபா, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என தெரிவிக்கிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்