இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2023) | 9 PM Headlines | Thanthi TV
'இந்தியா' Vs என்.டி.ஏ.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி என்பதை குறிக்கும் வகையில், "INDIA" என பெயர்...
ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடயிருப்பதாக பிரதமர் மோடி விமர்சனம்...
"பாஜகவை வீழ்த்துவோம்"
பாஜகவை வீழ்த்தும் வரை கூட்டணி தொடரும் என ராகுல்காந்தி இன்று உறுதி...
இந்தியா கூட்டணியை வீழ்த்த NDA கூட்டணிக்கு தைரியம் இருக்கிறதா? என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால்...
எதிர்க்கட்சியினர் கூட்டம் - 2வது நாள் அமர்வு
26 அரசியல் கட்சிகள் பங்கேற்பு
"பிரதமர் பதவி - காங்கிரசுக்கு ஆசையில்லை"
பெங்களூருவில் இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில், 26 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என அறிவித்தார். இதேபோல், பாஜகவை வீழ்த்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் இன்றைய கூட்டத்தின் முக்கிய நகர்வுகளை விவரிக்கிறார் செய்தியாளர் பாரதிராஜா....
என்.டி.ஏ. கூட்டணிக்கு எதிராக களமிறங்கும் 'இந்தியா'
முடிந்தால் எங்களை தடுத்து பாருங்கள் - மம்தா சவால்
அடுத்தக்கூட்டம் மும்பையில் நடைபெறுவதாக அறிவிப்பு
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, என்டிஏ கூட்டணிக்கு சவாலாக இருக்குமா? என்பது குறித்து அரசியல் விமர்சகரின் கருத்துகளை கேட்டறிந்தோம்... விவரங்கள் இவை...
மும்பையில் 3வது ஆலோசனை கூட்டம்
கட்சிகளை ஒருங்கிணைக்க 11 பேர் குழு
டெல்லியில் புதிய அலுவலகம் திறக்கப்படும் என அறிவிப்பு
பாரதிராஜா, இன்று நடைபெற்ற கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? விவரங்களை சொல்லுங்க..
அரசாணை வெளியீடு
தமிழகத்தில் உள்ள 32 அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்புக்கு தனி வாரியம்...