31 நிமிடத்தில் 70 செய்திகள்.. காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (28.06.2023)

Update: 2023-06-28 04:30 GMT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை 3வது வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஓரிரு நாட்களில் மழைக்கால கூட்டத்தொடருக்கான இறுதி தேதியை முடிவு செய்யவுள்ளது. இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது உரிமம் வழங்கப்பட்டுள்ள குவாரிகளில் கனிமங்களை வெட்டி எடுக்கப்படும் அளவை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மா மன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டியுள்ளது. அதில் தமிழகத்தில் ஜாதி, மோதல்களை உருவாக்க நினைக்கும் மாமன்னன் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும், போராட்டத்தை தூண்டாதே என்றும் போஸ்டர்களை அடித்து மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி உள்ளனர்.

பெரியார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கு பெறுவர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் எந்தவித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் கருப்பு உடை அணிந்து வர கூடாது என பெரியார் பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்