இந்திய ரயில்வேயின் பிரீமியர் ரயிலான வந்தே பாரத் கால்நடைகள் மீது மோதுவது தொடர்பான கேள்விக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி இப்போது வரையில் வந்தே பாரத் ரயில்கள் 68 முறை கால்நடைகள் மீது மோதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரயில் உயர்தர எஃகு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது, அதன் முகப்பு பகுதி மட்டும் வலுவூட்டப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆனது என தெரிவித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு 550 கிலோ மீட்டர் தொலைவு வரையில் இயக்கப்படும் இந்த ரயில்களில் இப்போது உட்கார்ந்து செல்லும் வசதி மட்டும் உள்ளதாகவும் நீண்ட தொலைவு வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யும் போது அதில் படுக்கை வசதியும் அறிமுகம் செய்யப்படும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.