26 நிமிடத்தில் 60 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (16.06.2023)

Update: 2023-06-16 04:19 GMT

மத்திய அரசை கண்டித்து, கோவையில் இன்று மாலை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக மேடை, உயர் மின் கோபுரம், கட்சி கொடிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை திமுக எம்.பி., ஆ.ராசா நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். இன்று மாலை நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில், திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். 

தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என எச்சரித்த முதல்வர் ஸ்டாலின், எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும் என்றும், இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை எனவும் ஆவேசமாக பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் என்றும் எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின், தமது வீடியோவில் வரம்பு மீறி பேசியுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிமொழி கைதுக்கு கூட ஸ்டாலின் இந்த அளவு கோபப்படவில்லை என்றார். வீடியோவில் பாஜக தொண்டர்களை முதலமைச்சர் நேரடியாக மிரட்டி இருப்பதாக அண்ணாமலை கூறினார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம் உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இதையடுத்து ஜூன் 28 - ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளி வைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்