29 நிமிடத்தில் 56 செய்திகள் | காலை தந்தி எக்ஸ்பிரஸ் | Speed News | Thanthi News (18.06.2023)
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் தொடர்ந்து 13 மணி நேரம் மேடையிலேயே நின்று ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் பரிசு வழங்கி கெளரவித்தார். குறிப்பாக 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற நந்தினிக்கு, வைர நெக்லஸ் ஒன்றையும் விஜய் பரிசளித்தார். இதனிடையே, மாற்றுத்திறனாளி மாணவர் கொடுத்த பரிசினையும் விஜய் பெற்றுக் கொண்டார். மாணவர்களுக்கு பரிசு கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த சிறிது நேரத்திலும் அவர்களுடன் விஜய் உரையாடினார்..
10 வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 498 மதிப்பெண் எடுத்த மாணவியின் ஆதங்கத்தை, நடிகர் விஜய் மேடையிலேயே தீர்த்து வைத்தார். தளபதி விஜய் விருது வழங்கும் விழாவில் 500க்கு 498 எடுத்த மாணவியான மனுவர்ஷா, தன்னை யாரும் கவுரவிக்கவில்லை என விஜயிடம் வருத்தம் தெரிவித்தார். உடனடியாக விஜய், அந்த மாணவி எடுத்த மதிப்பெண்ணை அனைவருக்கும் கூறி, வாழ்த்து தெரிவித்தார்.
தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் மாணவி ஒருவர், தனது தாயை பற்றி கவிதை வாசித்தார். அதனை கேட்ட நடிகர் விஜய், கைதட்டி தனது பாராட்டினை தெரிவித்தார்...
ஓட்டுக்குப் பணம் வாங்க கூடாது என்பதில் தனது கருத்துடன் நடிகர் விஜய் ஒத்துப்போவதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். விஜய் அரசியலுக்கு வரப்போகிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய கார்த்தி சிதம்பரம், ஓட்டுக்குப் பணம் தராத அரசியலை, தான் விரும்புவதாக தெரிவித்தார்.