ஆம்பூர் அருகே சமையலறையில் புகுந்த 5 அடி நீள நாகப் பாம்பு - லாவகமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்
ஆம்பூர் அருகே வீட்டின் சமையலறையில் புகுந்த நாகப் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்குப்பம் பகுதியில் துரை என்பவரின் வீட்டில், 5 அடி நீளம் கொண்ட நாகப் பாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியுள்ளது.
இதைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சமையலறையில் இருந்த பாம்பை லாவகமாக மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.