Whatsapp குரூப்பில் பொங்கலுக்கு மாஸ்டர் பிளான் போட்ட 4 இளைஞர்கள் -தலையில் தட்டி உட்கார வைத்த போலீஸ்
கடையநல்லூர் அருகே கம்பனேரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியினுள் இளைஞர்கள் சிலர் வேட்டைநாய்களை அழைத்து கொண்டு வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடையநல்லூர் அருகே கால்நடை மருத்துவமனையில் வேட்டை நாயை சிகிச்சைக்காக அழைத்து வந்த 4 இளைஞர்களை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 4 பேரும் வேட்டை நாய்கள் மூலம் வனவிலங்குகளை வேட்டையாடியது தெரியவர, அவர்களின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில், வேட்டையாடுவதற்கென்றே வாட்ஸ் அப்பில் குருப் ஆரம்பிக்கப்பட்டிருப்பதும், அடுத்தபடியாக பொங்கலன்று வேட்டையாட திட்டமிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நாலவரையும் கைது செய்த போலீசார், பின்னர் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.