18 நிமிடத்தில் 36 செய்திகள்... காலை தந்தி செய்திகள் | Thanthi Morning News | Speed News (27.04.2023)

Update: 2023-04-27 03:53 GMT

தமிழ்நாடு ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். டெல்லியில் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை சந்திக்கக் கூடும் என கூறப்படுகிறது. அப்போது தமிழ்நாடு நிலவரங்கள் குறித்து ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் ரவி நாளை (28.4.2023) சென்னை திரும்ப வாய்ப்புள்ளது.

 சூடானில் சிக்கித்தவிக்கும் கேரளாவைச் சேர்ந்தவர்களை அம்மாநில அரசின் சொந்த செலவில் அழைத்து வர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது

சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஆடியோ ஜோடிக்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

திராவிட மாடல் செயல் வேகத்தை சகித்துக் கொள்ள முடியாத சக்திகள், சிறப்பான பணிகளை சீர்குலைக்க நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுக்திகாக பயன்படுத்தி ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டு வருவதாக சாடினார். உதயநிதி, சபரீசனிடம் இருந்து தன்னை பிரித்து அரசியல் எண்ண்ங்களை நிறைவேற்ற துடிக்கும் பிளாக் மெயில் கும்பலின் முயற்சி வெற்றிப்பெறாது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் இரவு முழுவதும் காத்திருந்தனர்.கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தடுப்புகளை வைத்துள்ளனர். ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள், ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை பல்வேறு விலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்