ஷ்ரத்தா கொலை வழக்கில் புதிய திருப்பம் - 3000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த போலீசார்..

Update: 2023-01-22 15:43 GMT

டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான அப்தாபிற்கு எதிராக, மூவாயிரம் பக்க குற்றப்பத்திரிக்கையை போலீசார் தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த ஆண்டு மே மாதம் ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணை கொலை செய்து, உடலை பல துண்டுகளாக வெட்டி காட்டுப்பகுதியில் வீசிய சம்பவத்தில் அந்த பெண்ணின் காதலன் அப்தாப் கைது செய்யப்பட்டார்.

குற்ற வாளிக்கு எதிராக ஆதாரங்களை சேகரித்த போலீசார், டி.என்.ஏ. சோதனையையும், அப்தாபிற்கு நார்கோ பரிசோதனையையும் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் டி.என்.ஏ. மற்றும் நார்கோ பரிசோதனை தகவல்களையும், 100 சாட்சியங்கள் மற்றும் தடவியல் நிபுணர்களின் ஆதாரங்களையும் சேர்த்து அப்தாபிற்கு எதிராக மூவாரயிரம் பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தயாரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்