முதல் போட்டியில் 171 ரன்கள்.. தந்தையிடம் அழுது கதறிய 'ஜெய்ஸ்வால்' - வீடியோ காலில் நடந்த சம்பவம்

Update: 2023-07-17 06:11 GMT

அறிமுக போட்டியில் சதமடித்த பிறகு வீடியோ காலில் தன்னிடம் பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், உணர்ச்சிவசப்பட்டு அழுததாக அவரது தந்தை கூறியுள்ளார். மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் போட்டியிலேயே சதமடித்ததோடு 171 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தநிலையில் சதமடித்த பிறகு அதிகாலையில் தன்னுடன் வீடியோ காலில் பேசிய ஜெய்ஸ்வால், கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுததாகவும், அப்போது தானும் அழுததாகவும் அவரது தந்தை கூறியுள்ளார். நீங்கள் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என ஜெய்ஸ்வால் கேட்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்