11 இஸ்லாமியர்கள் உயிரிழப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர்கள் உட்பட 67 பேர் விடுதலை
குஜராத் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 67 பேரை நேற்று விடுதலை செய்தது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம். குஜராத் மாநிலம் நரோதா கிராமத்தில் கடந்த 2002ம் ஆண்டு பெரும் வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது. இதில் வீடுகளுக்கு வைக்கப்பட்ட தீயில் 11 இஸ்லாமியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கானது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பை நேற்று வழங்கிய நீதிபதி எஸ்.கே. பக்ஸி, குற்றம் சாட்டப்பட்ட 67 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார். இந்த 67 பேரில் பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோத்நானி, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் ஜெய்தீப் படேல், பஜ்ரங்தள முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரும் அடங்குவர்.