புத்தாண்டில் சர்ப்ரைஸ் கொடுத்த வனத்துறையினர்!மகிழ்ச்சியில் துள்ளி குதித்த பழங்குடியின மாணவ மாணவிகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பழங்குடியினமான மாணவிகளுக்கு அமரன் படத்தை திரையிட்டு காட்டிய வனத்துறையினர், அவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர்.
ஜீன்புல் தாவரவியல் பூங்காவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவ மாணவிகளை வனத்துறையினர் அழைத்து வந்தனர். அங்கு உள்ள கூட்டு அரங்கில் மாணவ மாணவிகள் தங்களின் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் விதமாக அமரன் படம் திரையிடப்பட்டது. படம் முடிந்த பிறகு அங்கு வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மாணவ மாணவிகளுக்கு வனத்துறை சார்பாக கேக் வெட்டி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.
அப்போது பேசிய மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, எந்த சூழலிலும், மாணவ மாணவிகள் தங்களின் பள்ளி படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்று அறிவுறுத்தினார்