"ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது?" X தளத்தில் கொளுத்தி போட்ட அண்ணாமலை | BJP

Update: 2025-01-02 02:05 GMT

அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் தொடக்க விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 500 அரசுப் பள்ளிகள், அவற்றின் அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளால் மேம்படுத்தப்படும் என்ற தீர்மானத்தை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரவேற்றிருப்பதாக கூறியுள்ளார்.

500 அரசுப் பள்ளிகளை மேம்படுத்தக் கூட தமிழக அரசிடம் நிதியில்லையா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்திருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக அரசின் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு, இந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரத்து 42 கோடி ரூபாய் என்றும், இது தவிர, ஒவ்வொரு ஆண்டும், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த பணம் எங்குதான் செல்கிறது என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்