"100 நாள் வேலை திட்டம் நிறுத்தம்" - அதிகாரி பதிலால் அதிர்ந்த கவுன்சிலர்கள் - ஆரணியில் பரபரப்பு

Update: 2023-01-26 03:28 GMT

ஆரணியில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில், பணம் விரையம் ஏற்படுவதால் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக, திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர கூட்டம் நடைபெற்ற. அப்போது, குன்னத்துர் ஒன்றியத்தில் 100 நாள் பணி நடைபெறாதது குறித்து திமுக கவுன்சிலர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த திட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி சவிதா, 100 நாள் பணி முழுமையாக பலன் அளிக்கவில்லை எனவும், மாவட்ட நிர்வாகம் நிதி வழங்காததால், பணி நிறுத்தப்பட்டதாகவும் கூறினார். அதிகாரி அளித்த பதில், கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்