100 கோடி பேருக்கு காதுகேளாமல் போகும்? - ஆய்வில் வெளியான ஆபத்து செய்தி

Update: 2022-11-17 17:02 GMT

இயர் ஃபோன்களால் உலக அளவில் 100 கோடி பேருக்கு காதுகேளாமை ஏற்படும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த வருமானப் பிரிவு, அதிக வருமானப் பிரிவு என்கிற வித்தியாசம் இல்லாமல், செல்ஃபோன் இயர்ஃபோன் பயன்படுத்துவது பரவலாக பெருகியுயுள்ளது.

உலக அளவில் விடலைப் பருவத்தினரும் இளைஞர்களும் அதிக அளவில், பலவிதமான காதணிகேட்பிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்மார்ட்வகை செல்ஃபோன்கள், இயர்ஃபோன்கள், இயர் பட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, பெரும்பாலானவர்கள் 105 டெசிபிள் ஒலி அளவுவரை வைத்துக்கொள்கிறார்கள்.

குறிப்பாக, சத்தமான இடங்களில் சராசரியாக 104 முதல் 112 டெசிபிள்வரை ஒலியைக் கேட்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக, குழந்தைகளுக்கு 75 டெசிபிள்வரையும், பெரியவர்களுக்கு 80 டெசிபிள்வரையும் ஒலி அளவு பாதுகாப்பானது.

ஆனால், அண்மையில், பிஎம்ஜே குளோபல் ஹெல்த் ஆய்விதழில், இதுகுறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடலைப் பருவத்தினர் 24 சதவீதமும், இளைஞர்கள் 48 சதவீதமும், சத்தமான சூழலில் பாதுகாப்பில்லாதபடி ஒலியைக் கேட்டுவருகின்றனர் என்றும்,

இதேநிலை நீடித்தால் உலக அளவில் 67 லட்சம் முதல் 135 லட்சம்வரையிலான இளம்வயதினருக்கு காதுகேளாமை ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்