"பாஜக அடித்த கொள்ளை பணத்தில் 100 எய்ம்ஸ்...." - பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
கர்நாடகாவில் பாஜக ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை சுருட்டியிருக்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் இண்டியில் பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி, கர்நாடகாவில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாஜக ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளது என குற்றம் சாட்டினார். பாஜக கொள்ளையடித்த பணத்தை கொண்டு 100 எய்ம்ஸ் மருத்துவமனைகளை கட்டியிருக்கலாம், 30 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்பறைகளை கட்டியிருக்கலாம் மற்றும் 30 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்டியிருக்கலாம் எனவும் பிரியங்கா காந்தி பட்டியலிட்டார். மக்கள் பிரச்சினையை பற்றி பாஜகவினரால் மக்கள் முன்பாக பேச முடியவில்லை என்பதால் மக்கள் வளர்ச்சிக்கு சம்பந்தம் இல்லாத பிற புதிய பிரச்சினைகளை எழுப்புகிறார்கள் எனவும் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்தார்.