மெக்சிகோ நாட்டில் கார் பந்தயத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பஜா கலிபோர்னியா மாகாணத்தின் என்செண்டா நகரில் உள்ள சென் வென்சிட்டியில் கார் பந்தயம் நடைபெற்றது. அப்போது வேனில் வந்த மர்ம கும்பல் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் கார் பந்தய வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.