பிறந்த 1 மாத பிஞ்சு குழந்தையின் உயிரை பறித்த கார்கள் - மாமல்லபுரத்தில் கோர விபத்து
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், சாலையை கடக்க முயன்ற கார் மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில், 1 மாத குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்திலுள்ள தமிழ்நாடு ஒட்டல் அருகே, சாலையை கடக்க முயன்ற கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த 1 மாத குழந்தையான நித்தீஷ், செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.